search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் கபடி போட்டி"

    பாகலூரில் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டிகளை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தொடங்கி வைத்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், சேலம் மண்டல அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பாகலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கபடி வீராங்கனையருக்கு சீருடைகளை வழங்கி போட்டியினை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பாகலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை புத்திலிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சேலம், சங்ககிரி, கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில், மூத்தோர், மேல் மூத்தோர் ஆகிய பிரிவுகளில் 10 அணிகளை சேர்ந்த 120 மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

    மேலும் இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராம் மற்றும் முனிராஜ், ரவிக்குமார், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிகள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
    கரூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பெண்கள் கபாடி போட்டி கரூர் மலையூர் ஜி.கே. வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    கரூர்:

    கரூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பெண்கள் கபாடி போட்டி கரூர் மலையூர் ஜி.கே. வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பள்ளி தாளாளர் விசா. ம.குணசேகரன் தலைமை தாங்கினார். 

    முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொங்கு கல்வி அறக்கட்டளை இணை செயலாளர் விசா. ம.சண்முகம், மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் அமலி டெய்சி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயபால், முத்துச்சாமி, ஜெயச்சந்திரன், மகாமணி, சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்பட்டன.
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி, இறுதிப்போட்டியில் ஈரானிடம் தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. #AsianGames2018 #IranianWomensKabaddi
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அரையிறுதியில் சீன தைபே அணியை 27-14 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்டது.

    மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 24-27 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.



    இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IranianWomensKabaddi
    ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி 33-23 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. #AsianGames2018 #kabbadi
    ஆசிய விளையாட்டு பெண்கள் கபடியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 43-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி இன்று தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் 33-23 என்ற கணக்கில் வென்று 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி நாளைய போட்டியில் இலங்கை, இந்தோனேசியாவை சந்திக்கிறது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று வங்காளதேசம் (50-21), இலங்கை (44-28) அணிகளை வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது. #AsianGames2018 #kabbadi
    ×